Pathu Thala Audio Launch: ‘நான் வேற மாதிரி வந்துருக்கேன்..’பத்துதல இசை வெளியீட்டு விழாவில் தெறிக்கவிட்ட சிம்பு!
வரும் 30ஆம் தேதியன்று வெளியாகவுள்ள படம், பத்துதல
பத்து தல படத்தில் கவுதம் கார்த்தி, சிலம்பரசன், கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்
இதில் சிம்பு, டான் கதாப்பாத்திரத்தில் வருகிறார்
பத்து தல படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது
இதில், நடிகர் சிம்பு தனது புது லுக்கில் கலந்து கொண்டார்
மேடையேறி பேசிய அவர், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக கூறி “லூசுப்பெண்ணே” பாடலை பாடினார்
பிறகு சிறிது நேரம் நடனமும் ஆடினார்.அதன் பிறகு, “இந்த படத்துல எனக்கு ஜோடி இல்லை. வாழ்க்கையிலேயும் ஜோடி இல்லை. அது எனக்கு பிரச்சினையுமில்லை” என்று பேசினார். மேலும், தனது ரசிகர்கள் பெருமைப்படும் படி இனி நடந்துகொள்வதாகவும் இப்போது அவர் வேற மாதிரி வந்திருப்பதாகவும் தெரிவித்தார்
பத்து தல படத்தில் நடித்துள்ள பிரியா பவானி சங்கரும் நேற்றைய விழாவில் கலந்து கொண்டார்
கெளதம் கார்த்திக்-ஏ.ஆர்.ரஹ்மான்-சிம்பு ஆகியோர் விழாவின் போது ஒன்றாக அமர்ந்திருந்த காட்சி
ரசிகர்கள் மத்தியில் பத்து தல படத்தின் ட்ரைலருக்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது