Sarpatta Parambarai Team Pics: சார்பட்டா பரம்பரை டீம் க்ளிக்ஸ்
திரையரங்குகளில் வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் சார்பட்டா பரம்பரை திரைப்படம், ஓடிடியில் அமேசான் ப்ரைம் வீடியோவில் நேற்று வெளியானது.
படம் வெளியான சில நிமிடங்களிலேயே #SarpattaParambarai ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியது.
மெட்ராஸ் பாக்ஸிங் பரம்பரைகளில் சார்பட்டா- இடியப்ப பரம்பரைகளில் நடக்கும் ஒரு முக்கியமான போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பதுதான் சார்பட்டா பரம்பரை திரைப்படம்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஸன்ஸ் கே 9 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியது இந்த படம்
அவ்வபோது வெளியிடப்பட்ட சார்பாட்டா பரம்பரை புரமோஷன் போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூடுதலாக்கின.
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ், படத்தின் கேஸ்டிங். கபிலன், வேம்புலி கேரக்டர்களை தவிர்த்து குறிப்பிடுவதற்கு இன்னும் நிறைய கேரக்டர்கள் இருக்கின்றன.