Richa Gangopadhyay : 'மயக்கம் என்ன’ யாமினியின் மறுமுகம்..அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலான நாயகிக்கு பிறந்தநாள்!
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். கோலிவுட்டில் வெளியான மயக்கம் என்ன படத்தில் யாமினி எனும் கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை கவர்ந்தார். அன்றிலிருந்து பலர், “எனக்கு யாமினி மாதிரி பொண்ணு வேணும்..” என்று கூறிவருகின்றனர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசில தமிழ் படங்களிலும், நிறைய தெலுங்கு படங்களிலும் நடித்திருந்த இவர், 2017ஆம் ஆண்டில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்
அங்கு, அவருடன் சேர்ந்து படித்த ஜோ லங்கேலா மீது காதல் வயப்பட்டார்
அதன் பிறகு, பெரிதாக படங்களில் நடிப்பதை ரிச்சா நிறுத்தி விட்டார்
சில நாட்கள் பயணங்களிலும் காதல் வாழ்க்கையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் ரிச்சா
ரிச்சா, சினிமா துறையை தவிர தொழில் துறையிலும் ஈடுபாடுக்காட்டினார்
தனது காதலர் ஜோ லங்கேலாவை 2019ஆம் ஆண்டு கரம் பிடித்தார்
முதலில் ரிச்சாவின் குடும்ப வழக்கப்படியும் பின்னர் ஜோவின் குடும்ப வழக்கப்படியும் திருமணம் நடைப்பெற்றது
2021 ஆம் ஆண்டு ரிச்சாவிற்கு லூகா என்ற ஆண் குழந்தை பிறந்தது
தற்போது தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அமெரிக்காவில் உள்ள போர்ட்லாந்து நகரில் வசித்து வருகிறார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -