Oscars 2022: 6 விருதுகளை அள்ளிய டியூன் திரைப்படம்... ஆஸ்கர் 2022 அப்டேட்ஸ்!
ஆஸ்கர் விருது: சிறந்த துணை நடிகை - ஹரியானா டிபோஸ் 'வெஸ்ட் சைட் ஸ்டோரி' திரைப்படத்தில் நடித்த ஹரியானா டிபோஸ்க்கு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆஸ்கர் விருது: 6 விருதுகளை அள்ளிய டியூன் திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் விருதுகளை குவித்துள்ளது
ஆஸ்கர் விருது: சிறந்த நடிகர் - வில் ஸ்மித் கிங் ரிச்சர்ட் திரைப்படத்திற்காக தனது முதல் ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் வென்றுள்ளார். பிரபல டென்னிஸ் வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோரை சாதனையாளர்களாக மாற்ற அவரது தந்தை சந்தித்த சவால்களை படம் பேசுகிறது
ஆஸ்கர் விருது: சிறந்த நடிகை - ஜெஸ்சிகா கேஸ்டைன் 'தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே திரைப்படத்திற்காக நடிகை ஜெஸ்சிகா கேஸ்டைன் ஆஸ்கர் வென்றுள்ளார்
ஆஸ்கர் விருது: சிறந்த படம் - CODA பிரெஞ்ச் மொழியின் La Famille Belier படத்தின் ஆங்கில ரீமேக் CODA. இந்த படத்தில் தந்தையாக நடித்த டிராய் கோட்சூர் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார். ஆஸ்கர் விருதை காதுகேளாதோர் சமூகத்திற்கு அர்ப்பணிப்பதாக டிராய் தெரிவித்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -