March Releases : 'ஆரம்பிக்கலாமா..?’ மக்களின் அதீத எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா மார்ச் மாத திரைப்படங்கள்?
நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, விடுதலை படத்தின் மூலம் சீரியஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். போதாக்குறைக்கு இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் விடுதலை படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படம், இந்த மாதத்தின் இறுதியில் வெளியாகவுள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ள படம் பத்து தல. வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு சிம்பு இப்படத்திலும் டான் ரோலில் நடித்துள்ளதால், பத்து தல மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படம், வரும் 30ஆம் தேதி வெளியாகிறது
ஃபீல் குட் படங்களாக நடித்து பல ரசிகர்களின் மனங்களில் சாக்லேட் பாயாக நின்ற நடிகர், நானி. இவர், முதல் முறையாக தசரா படத்தில் ரக்கட் பாய் ரோலில் நடித்துள்ளார். தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்தின் மீதும் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்பு உள்ளது. இந்த படம், இம்மாதம் 30ஆம் தேதி வெளியாகிறது
கன்னட சூப்பர் ஸ்டார், சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள படம் கப்சா. இப்படத்தின் ட்ரைய்லரில் கே.ஜி.எஃப் படம் போன்ற காட்சியமைப்புகளும் மியூசிக் ஸ்கோரிங்கும் இடம் பெற்றுள்ளதால், மக்களுக்கு இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கப்சா, வரும் 17ஆம் தேதி ரிலீஸாகிறது
பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவி, கடல் வழி கடத்தல் செய்யும் நாயகனாக நடித்துள்ள திரைப்படம்தான் அகிலன். பூகோளம் படத்தை இயக்கி என்.கல்யண கிருஷ்ணன் இப்படத்தையும் இயக்குகிறார். அகிலன் படம் நாளை (மார்ச்.10) திரைக்கு வருகிறது
ஹாலிவுட் மட்டுமன்றி, அகில உலக அளவில் பல ரசிகர்களை கொண்ட நடிகர், கியானு ரீவ்ஸ். இவர் நடித்துள்ள ஜான் விக்:சேப்டர் 4 திரைப்படம் இம்மாதம் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது. சினிமா ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலுடன் உள்ளனர்
ஷஸாம்! ஃபியூரி ஆஃப் காட்ஸ் திரைப்படம் மார்ச் 14ஆம் தேதியன்று வெளிவருகிறது. இப்படத்திற்கு இந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளதால், இதற்கும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -