Lokesh Kanagaraj : மக்களின் மனதில் கோட்டை கட்டிய லோகியின் கதாபாத்திரங்கள்!
மாநகரம், கைதி, விக்ரம் உள்ளிட்ட பல பிரபலமான படங்களை இயக்கி குறுகிய காலத்திலேயே சிறந்த இயக்குனர்களின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டார். லோகியின் பிறந்தநாளை முன்னிட்டு இவரது சிறந்த கதாப்பாத்திர படைப்புகளை பார்க்கலாம் வாங்க
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமாநகரம் படத்தில் இடம் பெற்றிருந்த ஸ்ரீ மற்றும் சந்தீப்பின் கதாபாத்திரங்கள்
கைதி-இப்படத்தில் சிறைக்கைதியாக வந்த டில்லி என்ற கதாப்பாத்திரத்தின் தாக்கம் ரசிகர்களின் மனதில் இன்றளவும் உள்ளது
மாஸ்டர் படத்தில் வில்லனாக வரும் பவானி கதாபாத்திரம். வழக்கமாக வில்லனிற்குதான் குடிப்பழக்கம் மதுப்பழக்கம் என அனைத்தும் இருக்கும். ஆனால் இதில் மாறாக, வில்லன் கெட்ட வார்த்தை பேச மாட்டார், குடி மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்காது. இது அனைத்துமே ஹீரோவிடம்தான் இருக்கும்.
மாஸ்டர் படத்தில் ஹீரோவாக வரும் ஜேடி கதாபாத்திரத்தில் விஜய் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்
விக்ரம் படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், முக்கிய நாயகனாக வரும் விக்ரம்தான் அனைவரையும் கவர்ந்தது
விக்ரம் படத்தில் 10 நிமிடமே வரும் ’ரோலக்ஸ்’ கதாபாத்திரம் அனைவரையும் ‘ரோலக்ஸ் சார்’ என கூப்பிட வைத்தது
தளபதி விஜய்யின் 67ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். இப்படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் Bloody Sweet என விஜய் பேசும் டைலாக் ஏற்கனவே எல்லோரையும் கவர்ந்து விட்டது. இதனால் இந்த கதாபாத்திரமும் அனைவர் மனதிலும் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -