ஏதேதோ நினைவு தோனுதே... எங்கேயோ இதயம் போகுதே! சில்க் ஃப்ளாஷ்பேக்
1979ல் சிவக்குமார்- சரிதா நடித்த வண்டிச்சக்கரம் படம் உருவானபோது, விஜயலட்சுமி என்ற ஆந்திர வைரத்தை கதை வசன கர்த்தா வினுச்சக்ரவர்த்திதான் சுமிதா என பெயரிட்டு அறிமுகம் செய்துவைத்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசாரயம் விற்கும் சில்க் என்ற பாத்திரம்தான், சுமிதாவிடையது. வா பாளையம் வா பாளையம்.. என்று நடிகர் சாமிக்கண்ணு கூவியபடியே, வா மச்சான் வா வண்ணாரபேட்டை என்று சில்க்கை வர்ணித்து பாடும் பாடல் தியேட்டர்களில் ரிபீட் முறையில் ஆடியன்சை வரவழைத்து அந்த படத்தை தாறுமாறாக ஓடச்செய்தது.
மூன்றாம் பிறையில் கமலோடு ஆடிய பொன்மேனி உருகுதே, சகலகலாவல்லவனில், நேத்து ராத்திரியெம்மா, பாயும்புலியில் ரஜினியுடன் ஆடி மாசம் காத்தடிக்க போன்ற பாடல்கள் சில்க் எங்கோ கொண்டுபோயின.
முன்னணி நடிகர்களாக இருந்தாலும் கூடுதல் வசூலுக்காக சில்க்குடன் ஒரு பாடலுக்காவது ஆடவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர் என்பது தமிழ் சினிமாவின் விசித்திரம். இங்குமட்டுமல்ல, தென்னிந்திய திரைப்படங்கள் அத்தனையிலும் சில்க் ஆட்டம், பேயாட்டம் போட்டது.
12 வயதில் ஏழ்மைக்கு தாக்குப்பிடிக்கமுடியாமல் நடிக்க வீட்டைவிட்டு ஓடிவந்தபோது அவரது குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுபற்றி பின்னர் சில்க்கிடம் கேட்டதற்கு, பணம், பங்களா வந்தபிறகு எல்லாம் சரியாயாகிவிட்டது ’’ என குடும்பத்தி னரின் நிஜ முகத்தை நாசூக்காய்தான் சொன்னார்
சில்க் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம் அவர் இளமையிலேயே மறைந்தது தான்..கிழத்தோற்றம் கொண்ட சில்க் சுமிதாவை இந்த உலகம் பார்க்கமுடியாதபடி செய்துவிட்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -