Kiara Advani Photos : மேகமோ அவள்..மாய பூ திரள்.. கியாரா அத்வானியின் சூப்பர் க்ளிக்ஸ்!
பிரபல பாலிவுட் நடிகையான கியாரா அத்வானியின் ரியல் பெயர் ஆலியா அத்வானி. மும்பையில் பிறந்த இவர், ஃபுக்லி எனும் ஹிந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதன் பிறகு லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் முதல் பாகத்தில் நடித்து பிரபலமானார். அர்ஜூன் ரெட்டியின் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தில் நடித்து அசத்தினார்.
முன்னாள் இந்திய ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய ஷெர்ஷா படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவிற்கு ஜோடியாக டிம்பிள் சீமா எனும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
ஆன் ஸ்கிரீனில் இவர்களுக்குள் தோன்றிய கெமிஸ்ட்ரி ஆஃப் ஸ்கிரீனிலும் தொடர்ந்தது. பின், இருவரும் காதலித்து 2023 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்
உற்றார் உறவினர் சூழ ராஜஸ்தானில் நடந்த இவர்களது திருமண வீடியோவும் புகைப்படங்களும் செம வைரலானது. இன்று வரை நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் சித்தார்த் - கியாரா பாடல் ஒலித்து வருகிறது.
ஹிந்தி படங்களை தவிர்த்து தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.