HBD Kangana Ranaut: கங்கனா பிகினி பிக்ஸ்... பரபர நாயகியின் பிறந்தநாள் இன்று!
நடிகை கங்கனா ரனாவத் பாலிவுடில் ‘குயின்’ ‘தனு வெட்ஸ் மனு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தில் செண்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அன்பே என் அன்பே என்ற பாடலில்தான் நம் தமிழ் சினிமா சமூகத்துக்கு அறிமுகமாக இருந்தாலும் இந்தப்பெண்ணா அது என்பதுபோல பாலிவுட்டில் அதிகம் கவனிக்க வைத்தவர் கங்கனா ரனாவத்.
நடிப்புக்கு அடையாளமாக பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவியில் கவனிக்க வைத்தவர்.
கலையில் திறமை, வார்த்தைகளில் சர்ச்சை என என்றுமே சர்ச்சை நாயகியாக வலம் வரும் கங்கனாவுக்கு இன்று 35வது பிறந்ததினம்.
துணிச்சலான கதையம்சங்களை கையில் எடுத்து நடிப்பது, வெறும் கிளாமர் ஆர்டிஸ்டாக வந்து போகாமல் நடிப்பில்தான் இருக்கிறது அனைத்துமே என பாலிவுட்டையே பரபரக்க வைத்தவர் கங்கனா
அதேபோல் சர்ச்சைகளுக்கும் குறைவே இல்லாதவர். சினிமாவில் கங்கனாவின் வேட்கையைம், வெற்றியையும், உழைப்பையும் மெச்சும் பலரும் அவரின் கருத்துகளில் முரண்பட்டே நிற்பர்.
அரசியல் நகர்வுகளை திட்டமிட்டு கருத்துகளை சொல்வது, வேண்டுமென்றே சர்ச்சைகளை கிளப்புவது என தன்னை எப்போதும் சர்ச்சை வளையத்துக்குள் வைத்திருப்பதே அவருக்கு பிடிக்கும்.