Santosh Subramaniam:அழகான காதல்..அப்பா-மகனின் பாசப்போராட்டம்..அனைத்தையும் காட்டிய சந்தோஷ் சுப்ரமணியம்!
2008 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த படம் சந்தோஷ் சுப்ரமணியம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅழகான காதலையும் அப்பா-மகனுக்கு இடையேயான பாசத்தையும் ரசிகர்களுக்கு கற்றுக்கொடுத்த படம் இது.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தன.
நடிகர் சித்தார்த், இப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘அடடா அடடா அடடா..என்னை ஏதோ செய்கிறாய்’ பாடலை பாடியிருந்தார்.
2006ஆம் ஆண்டு பொம்மரில்லு எனும் பெயரில் தெலுங்கு மொழியில் வெளியான படத்தின் தமிழ் ரீ-மேக்தான் சந்தோஷ் சுப்ரமணியம்.
பொம்மரில்லு படத்திலும், நடிகை ஜெனிலியாதான் ஹாசினி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ், தமிழ்-தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அப்பாவாக நடித்திருந்தார்.
இந்த படம், வெளியான புதிதில்தான் ஐ.பி.எல் சீசனும் தொடங்கியது. இருப்பினும் சந்தோஷ் சுப்ரமணியம் படம் திரையரங்குகளில் நன்றாக ஓடி வசூல் குவித்தது.
15 வருடங்கள் கடந்தும், இப்படம் இன்றும் ரசிகர்களின் மனங்களில் அழியா இடம் பெற்றுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -