Ileana D'Cruz: ‘நான் தாயாக உள்ளேன்..’ மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்த இலியானா!
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் பிரபல நடிகையாக இருந்தவர் இலியானா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமும்பையில் பிறந்து கோவாவில் வளர்ந்த இவர், பாலிவுட்டின் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.
தமிழில், “இருக்கானா இடுப்பிருக்கானா...” பாடலில் இவர் இடுப்பை வளைத்து ஆடும் நடன அசைவுகளுக்கு பலர் ரசிகர்களாக உள்ளனர்.
இலியானா, ஒரு முக்கியமான செய்தியை தனது சமூக வலைதள பக்கம் மூலம் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.
இலியானா விரைவில் தாயாக உள்ளார். இதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் குழந்தை சட்டையை புகைப்படமாக எடுத்து அதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், Mama என எழுதப்பட்டிருக்கும் செயினையும் கழுத்தில் அணிந்துள்ளார் இலியானா. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை கேட்டவர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -