Golden Globes 2024 : கோல்டன் குளோப்ஸ் 2024 விருதுகளை வென்றவர்கள் யார் யார்?
சிறந்த இயக்குநருக்கான விருது ஓப்பன்ஹெய்மரை இயக்கிய கிறிஸ்டோபர் நோலனுக்கு கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருதை ஓப்பன் ஹைமர் படத்திற்காக சில்லியன் மர்ஃபி வென்றார். சிறந்த துணை நடிகருக்கான விருதை ஓப்பன்ஹெய்மரில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் வென்றார்.
சிறந்த நடிகைக்கான விருதை கில்லர்ஸ் ஆஃப் ப்ளவர் மூன் படத்திற்காக லில்லி கிளாட்சன் வென்றார்
சிறந்த துணை நடிகைக்கான விருதை தி ஹோல்டோவர்ஸ் படத்தில் நடித்த டாவின் ஜாய் ராண்டால்ஃப் வென்றார். அதுபோல், இசை அல்லது காமெடி பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதை பால் கியாமட்டி, ஹோல்டோவர்ஸ் படத்திற்காக வென்றார்.
சிறந்த பாடலுக்கான விருதை எலிஷ் மற்றும் ஃபின்னியாஸின் வாட் வாஸ் ஐ மேட் ஃபார் பாடல் வென்றது
சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை தி பாய் அண்ட் தி ஹெரோன் படம் வென்றது.
பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த படத்திற்கான விருதை பார்பி படம் வென்றது.
சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதையும், சிறந்த திரைக்கதைக்கான விருதையும் அனாடமி ஆஃப் தி ஃபால் படம் வென்றது
சிறந்த துணை நடிகைக்கான விருதை தி ஹோல்டோவர்ஸ் படத்தில் நடித்த டாவின் ஜாய் ராண்டால்ஃப் வென்றார். அதுபோல், இசை அல்லது காமெடி பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதை பால் கியாமட்டி, ஹோல்டோவர்ஸ் படத்திற்காக வென்றார்.
(இசை அல்லது காமெடி) பிரிவில் சிறந்த படத்திற்கான விருதை பூர் திங்ஸ் வென்றுள்ளது. அதுபோல், (இசை அல்லது காமெடி) பிரிவில் சிறந்த நடிகைக்கான விருதை பூர் திங்ஸ் படத்தில் நடித்த எம்மா ஸ்டோனுக்கு வழங்கப்பட்டது.