Aishwaryaa Rajinikanth-Dhanush Separated: ”புரிதலும், அன்பும்தான் மிக தேவையானது” - தனுஷ், ஐஸ்வர்யா பிரிந்து வாழ முடிவு
தனுஷ் 16 வயதில் சினிமாவில் அறிமுகமானவர். இவர் 22 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினியை காதலித்து கரம் கரம்பிடித்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதனுஷ் - ஐஸ்வர்யா ரஜினி(aishwarya rajinikanth) திருமணம் 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது.
தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடிக்கு, யாத்ரா - லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தனுஷ் பல உயரங்களை தொட்டார்.
இந்நிலையில், இவருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்து ட்வீட் செய்திருக்கிறார்.
இதே குறிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஐஸ்வர்யா தனுஷ், “கேப்ஷன் தேவையில்லை என நினைக்கிறேன். உங்கள் அனைவரின் புரிதலும், அன்பும்தான் மிக தேவையானது” என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில், இருவரும் விவாகரத்து அறிவித்திருப்பது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -