OTT Releases: உள்ளூர் அய்யோத்தி முதல் வெளியூர் அவதார் வரை..இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்-தொடர்கள்!
சசிகுமார் நடிப்பில் வெளியான அய்யோத்தி தொடர்இம்மாதம் 31ஆம் தேதியன்று ஜீ 5 தளத்தில் வெளியாகிறது
சாரா அலி கான் நடித்துள்ள ’கேஸ்லைட்’ எனும் த்ரில்லர் படம், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகவுள்ளது
ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம், வெள்ளியன்று ஜீ5 தளத்தில் வெளியாகின்றது
அரியவன் திரைப்படம், டெண்ட்கொட்டா எனும் தளத்தில் வரும் 31 அன்று வெளியாகிறது
பிரபு தேவாவின் பாகீரா திரைப்படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் நாளை மறுநாள் வெளியாகின்றது
கௌரி கிஷன் நடித்துள்ள ஸ்ரீதேவி சோபன் பாபு படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வரும் 31ஆம் தேதி வெளியாகிறது
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் ப்ரைம் வீடியோவில் வரும் 31ஆம் தேதியன்று வெளியாகிறது. ப்ரைமில் பணம் செலுத்தி கணக்கு வைத்திருப்போர், இப்படத்தை பார்க்கவேண்டும் என்றால், இதற்கென தனியாக பணம் செலுத்த வேண்டும்
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அன்சீன் எனும் தொடர் வெளியாகிறது
கில் பாக்சூன் எனும் கொரியன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 31ஆம் தேதி வெளிவருகிறது
ஜெனிஃபர் ஆனிஸ்டன் நடித்துள்ள மர்டர் மிஸ்ட்ரி 2 திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை மறுநாள் வெளிவர இருக்கிறது
அமிகோஸ் எனும் தெலுங்கு படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் மார்ச் 31 அன்று வெளிவர இருக்கின்றது
கார்த்திக் ஆர்யன்-க்ரித்தி சனோன் நடித்துள்ள ஷேஸ்தா எனும் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 31 அன்று வெளியாகிறது