2024 Celebrities Marriage : இந்த வருடம் இந்த நடிகர்களுக்கெல்லாம் டும் டும் டும்..!
இந்திய திரையுலகில் பல நடிகர், நடிகைகளும் காதலித்து வரும் நிலையில் பலரும் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
என்.ஜி.கே, அயலான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய திரையுலகில் பிரபலமான ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவிற்கு அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட் நடிகர்களான புல்கித் சாம்ராட் மற்றும் க்ரித்தி கர்பாண்டா திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையான ஜான்வி கபூர் தனது காதலர் ஷிகார் பஹாரியாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாலிவுட்டின் பிரபலமான காதல் ஜோடி ஆதித்யா ராய் கபூர் - அனன்யா பாண்டே இருவரும் கரம் பிடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.