Yogi Babu : காமெடியில் கலக்கி இன்று ஹீரோவாக உயர்ந்துள்ள யோகி பாபுவிற்கு ஹேப்பி பர்த்டே!
தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக உள்ளவர், யோகி பாபு
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவரது அப்பா, ராணுவ வீரராக இருந்தவர். அப்பாவுடன் சேர்ந்து நிறைய இடங்களுக்கு யோகி பாபு பயணிக்க வேண்டி இருந்ததால், சில காலம் ஜம்மு காஷ்மீரில் பள்ளிப்படிப்பை பயின்றார்
சமீபத்தில் வெளியாகியிருந்த பொம்மை நாயகி படத்தில பாசமிகு அப்பாவாக நடித்திருந்தார்
சில மாதங்களுக்கு முன்பு தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்
‘மிஸ் மேகி’ எனும் படத்திற்காக முதல் முறையாக பெண் வேடமணிந்தார், யோகி பாபு
யோகி பாபுவிற்கு கிரிக்கெட்டின் மீதும் ஆர்வம் அதிகம் உள்ளது
சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தில் இவர் உருவ கேலிக்கு எதிராக பேசிய வசனங்கள் ரசிகர்களை கவர்ந்தது
பீஸ்ட் படத்தில் இவர் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து செய்த காமெடி, அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது
காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்து வந்த இவர் கோலமாவு கோகிலா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இனி வரும் காலங்களிலும் இவர் ஹீரோவாக நடிப்பார் என நம்பப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -