Pushpa 2: ’இது புஷ்பாவோட ரூலுடா..’அனல் பறக்க வைக்கும் அல்லு அர்ஜுனின் புஷ்பா பட டீசர்!
சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக #Whereispushpa என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வந்தது.
இதையடுத்து, புஷ்பா என்கிருக்கிறான் என்பதை இன்றைய டீசரில் வெளியிடுவோம் என அறிவித்திருந்தனர்.
சொன்னது போலவே, இன்று அந்த டீசரை வெளியிட்டுள்ளனர். அதில், திருப்பதி சிறையிலிருந்து 2004ஆம் ஆண்டு புஷ்பா தப்பித்து விட்டதாகவும் அவனை போலீஸார் சுட்டுக்கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இதனால் போராட்டம் வெடிக்கிறது
இதில் புஷ்பாவிற்கு வயதானது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால், இக்கதையில் புஷ்பாவுடைய ஃப்ளேஷ் பேக் கதை தொடருமோ என பலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
டீசரின் முடிவில் அல்லு அர்ஜுன் பேசும் “இது புஷ்பாவின் ரூலு..” எனும் காட்சியையும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
இந்த டீசர், தங்களின் எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்