Ramya Nambeesan Photos: சிறுகதை யென்பது நீ கண் மூடி திறத்தல் - ரம்யா நம்பீசன் புகைப்படத் தொகுப்பு இங்கே
கூப்பி நின்ற கரங்களின் மீது வந்து வழிகிறது ஒன்றிரண்டு கண்ணீர்த்துளி அதுநாள்வரை செய்த ஆண்மையின் அத்தனை பிழையும் உரிந்து உதிர்கிறது;
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு ஆணின் எல்லா திமிரும் கர்வமும் கடந்து போனவளின்; காலடி நிழலில் விழுந்து தொழுதுகொண்டிருக்கும்;
அள்ளிச்சொருகிய கொண்டையின் பூமயிர் ஒதுக்கி; பின்னங்கழுத்தில் நீயிடும் முத்தமில்லாது; எரிகிறது என் இரவு அணை;
உனக்காக காதலை சுமக்க தெரியாமலில்லை தேவி; அதை உன்னிடத்தில் பிரசிவிக்க தெரியாத ஆண் மலடியாய் இருக்கிறேன்; அஃதொன்றே யென் பிழை;
அகங்காரங்கள் அழிந்தொழிய ஜென்மம் மோட்சமருள; கீழ்மைகளும் பாவங்களும் கரைந்து போய்விட; உன் விழிகளால் தீட்சை அருளிக்கொண்டேயிரு தேவி!
மரணத்தின் தேர்காலில் பூட்டப்பட்ட வேட்டைநாயின் பசி எதுவோ; அதை ஒத்தது நானுன்னில் கொண்ட நேசம் அன்பாள்;
பிச்சையென்றே நினைத்துக்கொள் யென்னை தன்மானத்தோடு வாழவிடு காதலே; இந்த கவிதை வரிகள் #வாரிக்கையன் என்கிற தீர்க்கத்தரிசி எழுதியது. @Rowthra என்ற ட்விட்டர் கணக்கில் பின்தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -