Mouni Roy : மயங்குதே! சொல்ல தயங்குதே... காதல் கணவரை எண்ணி உருகிய மௌனி ராய்..!
’நாகினி' சீரியல் மூலம் பிரபலமானவர் இந்தி நடிகர் மௌனி ராய்.
இவர் தனது நீண்டநாள் பாய்பிரண்டான சுராஜ் நம்பியாரை கடந்த ஜனவரி மாதம் 27 ம் தேதி கோவாவில் திருமணம் செய்து கொண்டார்.
பாலிவுட் மட்டும் அல்லாது தமிழ்நாடு வரை இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.
சமீபத்தில், இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் அந்த புகைப்படங்கள் இந்தியா முழுவதும் படு வைரலானது.
தற்போது, மௌனி ராய் மற்றும் சூரஜ் நம்பியார் திருமணம் முடிந்த கையோடு காஷ்மீர் சென்று ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர்.
ஹனிமூன் சென்றுவந்த மௌனி ராய் முதலில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு நான் உன்னை எப்படி காதலிப்பது? என்று பதிவிட்டு தனது அன்பை வெளிக்காட்டியுள்ளார்.
மேலும், தனது திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு மௌனி ராய் தனது காதல் கணவனை எண்ணி கவிதையும் வடித்து வருகிறார்.