HBD S.J Suryah | பிறந்த நாள் வாழ்த்துக்கள் இயக்குநர் எஸ். ஜே. சூர்யா..!
எஸ். ஜஸ்டின் செல்வராஜ் - எஸ். ஜே. சூர்யா என்று அனைவராலும் அறியப்படும் இயக்குநர் , நடிகர் , திரைக்கதை எழுத்தாளர் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்,
வாலி மற்றும் குஷி படங்கள் இயக்கி தனக்கென்ற ஒரு தனி இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்ட இயக்குநர்
ஒரு நடிகன் ஆகவேண்டும் என்ற ஆசையில் சினிமா துறையில் நுழைந்தார் , பின்னர் இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குநராக பணியாற்ற தொடங்கினார்
நியூ படம் மூலம் நடிப்பில் அறிமுகமானார். பின்னர் , கள்வனின் கதாலி , திருமகன் போன்ற படங்களில் நடித்தார்.
உல்லாசம் படத்தில் எஸ். ஜே. சூர்யாவை சந்தித்த அஜித், அவர் வைத்து இருந்த வாலி திரைப்படத்தின் கதையை கேட்டு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் .
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இறைவி திரைப்படத்தில் இவர் நடிப்பை பலரும் பாராட்டினர்
இறைவியின் வெற்றியை தொடர்ந்து ஸ்பைடர், மற்றும் மெர்சல் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் இவருக்கு மீண்டும் வெற்றியை பெற்று தந்தது