HBD Director Shankar : சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படங்கள்!
1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடித்து வெளிவந்த படம் ஜென்டில் மேன். இது சங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமாகும்.
1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த படம் இந்தியன். இப்படத்தை சங்கர் இயக்கி இருந்தார். படத்தில் கப்பலேறிப் போயாச்சு, அக்கடான்னு நாங்க, டெலிபோன் மணிபோல் பாடல்களின் ஒளிப்பதிவு பிரமாண்டமாக இருக்கும்.
1999 ஆம் ஆண்டு அர்ஜுன் நடித்து வெளிவந்த படம் முதல்வன். இப்படத்தை சங்கர் இயக்கி இருந்தார். படத்தின் அணைத்து பாடல்களும், காட்சிகளும் பிரம்மண்டமாக இருக்கும்.
1998 ஆம் ஆண்டு பிரசாந்த் நடித்து வெளிவந்த படம் ஜீன்ஸ், இப்படத்தை சங்கர் இயக்கி இருக்கும். உலகின் ஏழு அதிசயங்களை ஒரே பாட்டில் காண்பித்து இருப்பார்
2005 ஆம் ஆண்டு விக்ரம் நடித்து வெளிவந்த படம் அந்நியன். இப்படத்தை சங்கர் இயக்கி இருந்தார். மல்டிபில் டிஸ்ஆர்டர் பிரச்சினையை மையமாக வைத்து அவர் பாணியில் படமாக்கி மாஸ் காட்டி இருப்பார்
2007 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் சிவாஜி தி பாஸ். இப்படத்தை சங்கர் இயக்கி இருந்தார். அதிரடி காட்சிகளும் ரஜினியின் ஸ்டைலும் படத்தின் ப்ளஸ்.
2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் எந்திரன். இப்படத்தை சங்கர் இயக்கி இருந்தார். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் மிக பிரமாண்டமாக அமைந்திருக்கும்.
2012 ஆம் ஆண்டு விஜய் நடித்து வெளிவந்த படம் நண்பன். இப்படத்தை சங்கர் இயக்கி இருந்தார். இது சங்கர் ரீமேக் செய்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.