Lokesh kanagaraj : கல்லூரி மாணவர்களை அப்டேட் மழையில் நனைய வைத்த இயக்குநர் லோக்கேஷ் கனகராஜ்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதைதொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்தார்.
சமீபத்தில் இவர் தனியார் கல்லூரி விழாவில் விருந்தினராக பங்குபெற்றார். அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில் முதலாவது, ‘லியோ படம் மற்ற படங்கள் போல் இருக்காது. இது முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும் கிட்டதட்ட கைதி படம் போன்றது. அதோடு என்னுடைய மற்ற படங்கள் போல் ஹீரோயினை இப்படத்தில் கொல்ல மாட்டேன்’ என்றார்.
இரண்டாவது, ‘லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும்’ என தெரிவித்துள்ளார்.
மூன்றாவது, ‘நடிகர் ரஜினியுடன் நான் அடுத்த படத்தில் இணைவது குறித்து புரோடக்ஷன் தரப்புதான் அப்டேட் தர வேண்டும்’ என்றுள்ளார்.
நான்காவது, ‘இரும்பு கை மாயாவிதான் என் கனவு திரைப்படம் அதனுடைய கதையை நான் எழுத கிட்டதட்ட 10 வருடங்கள் ஆகியது.’ என்றும் பேசினார்.
ஐந்தாவது, ‘சரியான கதை அமைந்தால் நிச்சயமாக நடிகர் அஜித்குமார் வைத்து படம் இயக்குவேன்.’ என்றுள்ளார்.