Priya Bhavani Shankar : விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பிரியா பவானி ஷங்கர்!
செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை தொடங்கி, கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியா பவானி ஷங்கர்
மேயாத மான் படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போதே பலரின் ஃபேவரட் நாயகியாக மாறிவிட்டார்.
அதனை தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல, ரத்னம் என பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்தார்.
இந்தியன் 2 படத்தில் நடித்ததற்கு இவரின் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதுபோன்ற மோசமான விமர்சனங்கள் அவரின் மனதை காயப்படுத்தியதாகவும் பேட்டி ஒன்றில் பிரியா கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான டிமான்டி காலனி 2 படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டெபியாக ஆரம்பம் முதல் இறுதி வரை முக்கிய பாத்திரமாக நடித்துள்ளார். இவர் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளது.