India Vs Bangladesh : 48வது சதம் அடித்த கோலி.. பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் 5, தொடங்கி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை போட்டியில் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற நான்காவது சுற்றில் இந்திய கிரிக்கெட் அணியும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும் மோதின
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ரோஹித் மற்றும் கில் இணை அடுத்தடுத்து மாறிமாறி பௌண்டரி, சிக்ஸர் என பந்துகளை சிதறடித்தனர்.
ரோஹித் அவுட்டாக அடுத்துவந்த கோலியும் அதிரடி காட்ட கிடுகிடுவென ரன் உயர்ந்தது. கோலி கே எல் ராகுல் இணை இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. கோலி 97 ரன்களை குவித்த நிலையில், வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது.
அப்போது சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியை தேடி கொடுத்து, 2023 உலகக்கோப்பை போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் கோலி. இந்த சதம் கோலியின் 48 வது சர்வதேச சதமாகும்.
விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. போட்டிக்கு பிறகு பேசிய கோலி, “உண்ணாமையாகவே ஆட்ட நாயகன் விருது ஜடேஜாவிற்குத்தான் செல்ல வேண்டும் அவருக்கு செல்ல வேண்டிய ஆட்ட நாயகன் விருதை நான் பறித்துக்கொண்டேன். முன்னதாக நடந்த போட்டிகளில் சதங்களை பூர்த்தி செய்யமுடியாமல் அரைசதங்களாகி இருந்ததால் இன்றைய ஆட்டத்தில் சதத்தை நோக்கி செல்லவேண்டும் என தீர்மானித்தேன் அதன் விளைவாகவே இந்த சதம்.” என கூறினார்.
இன்னும் ஒரு சதம் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்து விடுவார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -