Chithha OTT Release : ஓடிடி ரிலீஸுக்கு தயாரான உணர்ச்சிகரமான சித்தா திரைப்படம்!
செப்டம்பர் 28 ஆம் தேதியன்று வெளியான சித்தா திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது
அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் இதில் நடித்து இருந்தனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சித்தார்த்துக்கு சித்தா திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது.
பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் தொடர் நிகழ்வுகளை உணர்ச்சிகரமான ஒரு கதையாக சொல்லியிருக்கிறார் அருண் குமார்.
திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மனதை வென்ற சித்தா திரைப்படம் நவம்பர் 17 அன்று ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
நேற்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சித்தா திரைப்படம் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் நவம்பர் 28 ஆம் தேதி அன்று ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.