Cheesy egg toast recipe : பிரேக்-ஃபாஸ்ட் என்ன செய்வது என்று தெரியவில்லையா? இதோ இந்த சீஸி எக் டோஸ்டை செய்யுங்கள்!
பிரேக் - ஃபாஸ்ட்டுக்கு இட்லி, தோசை சாப்பிட்டு சலித்து விட்டதா? இதோ இந்த புதிய ப்ரெட் ரெசிபியான சீஸி எக் டோஸ்டை வீட்டிலே செய்து பாருங்கள்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசீஸி முட்டை டோஸ்ட் தேவையான பொருட்கள் : முட்டை கலவை செய்ய முட்டை - 4, வேகவைத்த ஸ்வீட் சோளம், பச்சை குடைமிளகாய் - 1/4 கப் நறுக்கியது, சிவப்பு குடைமிளகாய் - 1/4 கப் நறுக்கியது, வெங்காயத்தாள், உப்பு, மிளகு தூள். சீஸி முட்டை டோஸ்ட் செய்ய பிரட் துண்டுகள், முட்டை கலவை, வெண்ணெய், சீஸ் துண்டு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் வேகவைத்த ஸ்வீட் சோளம், நறுக்கிய பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், வெங்காயத்தாள் சேர்க்கவும். பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.
பிரட் துண்டுகளின் நான்கு முனைகளையும் விட்டு உள் பக்கமாக சதுரமாக வெட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
பின்பு கடாயில் வெண்ணெய் தடவி அதில் பிரட்டின் வெளிப்புறம் சதுரமாக வெட்டிய முனைகளை வைத்து அதில் தயார் செய்த முட்டை கலவையை ஊற்றவும்.
பிறகு அதன் மேல் சீஸ் துண்டை வைக்கவும். பின்பு உள்புறமாக வெட்டிய பிரட் துண்டை அதன் மேல் வைத்து சுற்றிலும் வெண்ணெய் தடவவும். பிறகு திருப்பி விட்டு வேகவிடவும். சீஸி முட்டை டோஸ்ட் தயார்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -