Aadhi Pinisetty Pics: 'முகம் காட்டு நீ..! முழு வெண்பனி ஓடாதே நீ...! ஏன் எல்லையே...!' - நடிகர் ஆதி பினிசெட்டி
ஆதி பினிசெட்டி, தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் பிசியாக வலம்வரும் நடிகர்.
`நந்தி' அவார்ட் மற்றும் `சைமா' விருதுகளுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பிலிம்பேர் விருதுகளுக்கும் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் ஆதி 2006ல் தெலுங்கு திரைப்படமான ஓகா `வி` சித்ரம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
2007ம் ஆண்டு மிருகம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் .
இயக்குனர் ஷங்கர் தயாரித்த ஈரம் (2009) படம் மூலம் ஆதிக்கு தமிழ் திரையுலகில் ஒரு வெற்றி கிடைத்தது.
வசந்தபாலன் இயக்கிய அரவான் திரைப்படம், ஆதியின் நடிப்பிற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது
2017ம் ஆண்டில், மரகத நாணயம் மற்றும் தெலுங்கு படமான நின்னு கோரி போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
நின்னு கோரி படத்திற்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதை வென்றார் நடிகர் ஆதி.