Chandramukhi 2 : தள்ளி போகிறதா சந்திரமுகியின் வருகை..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
சுபா துரை | 08 Sep 2023 04:13 PM (IST)
1
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் சந்திரமுகி 2.
2
2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது.
3
இப்படம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக இருந்தது.
4
இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு தேதி மாற்றப்படுவதாக தகவல் வெளியாக உள்ளது.
5
CG VFX நிறைவு பெறாத காரணத்தால் சந்திரமுகி 2 செப் 28 ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
6
கூடுதலாக செப்டம்பர் 15 அன்று விஷாலின் மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்கள் வெளியாக இருக்கிறது. போட்டியை சமாளிக்க முடியாமல் சந்திரமுகி படக்குழு பின் வாங்குவதாகவும் தகவல் பரவி வருகிறது.