Alia bhatt : 'எந்தன் உலகே உன் கண்ணிலே ஆடுதே..'முதலாம் திருமண நாளை கொண்டாடும் ஆலியா-ரன்பீர் தம்பதி!
ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஆகிய இருவருமே ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகர்கள். இவர்கள் இருவரும் திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் தங்களது அசாத்திய நடிப்பின் மூலம் திரையுலகில் நல்ல இடத்தில் உள்ளனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆலியா மற்றும் ரன்பீர் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ப்ரமாஸ்திரா. இந்த படத்தின் படப்பிடிப்பு 2017 ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த படப்பிடிப்பின் போது இருவரும் காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
பாலிவுட்டின் பாப்புலர் காதல் ஜோடிகளாக வலம் வந்த ஆலியா மற்றும் ரன்பீர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2022 ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதியன்று பெண் குழந்தை பிறந்தது. இதற்கு ராஹா என பெயர் சூட்டினர்
தற்போது இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் ஆலியா பட், தன் இன்ஸ்டா பக்கத்தில் ஆலியா மற்றும் ரன்பீர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்களை பகிர்ந்து ஆலியா மற்றும் ரன்பீர் ரசிகர்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -