HBD Alia Bhatt : தேசிய விருது பெற்ற நடிகை ஆலியா பட்டிற்கு இன்று பிறந்தநாள்!
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் 31வது பிறந்தநாள் இன்று. திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ராஹா என்ற பெண் குழந்தை உள்ளது.
தான் நடிக்கும் படங்களை மிகவும் நேர்த்தியாக தேர்ந்து எடுத்து நடிக்கும் ஆலியா பட் பாலிவுட் திரையுலகில் மிகவும் திறமையான நடிகையாக கொண்டாடப்படுகிறார்.
2012ம் ஆண்டு வெளியான 'ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர்' திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
கங்குபாய் கத்தியவாடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.
2022ம் ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தின் மூலம் டோலிவுட் சினிமாவில் அறிமுகமான ஆலியா பட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அவரின் நடிப்பில் ஜிக்ரா' மற்றும் 'லவ் & வார்' உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த ஆண்டில் வெளியாக உள்ளன.