Bigg Boss 7 : டி.ஆர்.பி கிங் வந்தாச்சு...வெளியானது பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ!
ஸ்ரீஹர்சக்தி | 19 Aug 2023 04:10 PM (IST)
1
ஹிந்தியில் ஹிட்டான பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் 2017 ஆம் ஆண்டு முதல் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக தொடங்கியது.
2
ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்க, தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார்.
3
முதல் சீசனிலே இந்நிகழ்ச்சி பெரிய அளவில் ஹிட்டானது. அதனை தொடர்ந்து இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
4
இந்த நிகழ்ச்சியின் மூலம் கெட்ட பெயர் எடுத்த சிலரும் நல்ல பெயர் எடுத்த பலரும் உள்ளனர்.
5
தற்போது அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த, பிக்பாஸ் ஏழாம் சீசனின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சி கூடிய விரைவில் ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியை வழக்கம் போல் கமல் ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார்.
6
இதற்கு முன்னர், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் பரவலாக பகிரப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.