Arun Vijay : தீராத கால்வலியால் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துவரும் அருண் விஜய்..
அருண்விஜய் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாக ஹிட்டாகவில்லை. பின்னர், அஜித்குமாரின் “என்னை அறிந்தால்” படம், இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதற்போது நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், “அச்சம் என்பது இல்லையே” படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங்கின் போது, அருண் விஜய்க்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது.
அடிப்பட்ட காலுடன், வொர்க்-கவுட் செய்யும் யானை பட நடிகர்.
இவர் நடித்து வரும் “அச்சம் என்பது இல்லையே” படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.
கால் வலிக்கு உரிய சிகிச்சை பெற்ற பின்னரும், கால் வலியால் அவதிபட்டு வருகிறார் அருண் விஜய்.
கால் வலியை குறைக்க, ஆயுர்வேத சிகிச்சையை பெற்று வருகிறார். அதுதொடர்பான புகைப்படங்கள, அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இவரின் உடல் நலம் சீராக, ரசிகர்களும் சினிமா துறையினரும் வேண்டி வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -