AR Rahman : தெற்கில் தோன்றி வடக்கில் ஜொலிக்கும் ஆதவன்.. இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ரஹ்மான்!
இளையராஜாவிடம் உதவி இசையமைப்பாளராக பணி புரிந்து வந்தார் ஏ.ஆர் ரஹ்மான். 1992 ஆம் ஆண்டில் ஏ.ஆர் ரஹ்மானை ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தவர் மணிரத்னம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரோஜா படத்தில் இடம்பெற்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. இதனால் மற்ற மொழிகளிலும் இசையமைக்க தொடங்கினார். முதலில் மலையாளம் , தெலுங்கு மொழிகளில் இசையமைத்தார்.
இவரின் பாடல்கள் வட இந்தியா வரை பரவியதால் பாலிவுட்டிலும் தனது இசைபயணத்தை தொடங்கினார்.
தாவூத், கபி நா கபி, தில் சே, தால், தக்ஷக், லகான், ரங் தே பசந்தி, குரு, ஜோதா அக்பர், ராஞ்சனா, மாம், தில் பேச்சாரா, மிலி என பல படங்களில் இசையமைத்துள்ளார்.
ஏ.ஆர் ரஹ்மானிடம், சமீப காலமாக ஹிந்தி படங்களுக்கு ஏன் இசையமைக்கவில்லை என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “எனக்கு எதிராக ஒரு கும்பல் வேலை செய்கிறது.”என்று கூறினார். இந்த பதில் இந்திய திரை உலகையே உலுக்கியது.
பல இசையமைப்பாளர்கள் கொடி கட்டி பறந்த காலத்தில் தன்னுடைய திறமையால் பலரின் மனதை கவர்ந்த ஏ.ஆர் ரஹ்மானின் இசை பயணம் இன்னும் தொடரும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -