A.R.Rahman : சூப்பர் டூப்பராக நடந்து முடிந்த ஏ.ஆர்.ரஹ்மானின் சூஃபி கான்சர்ட்!
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ் சினிமா துறையில் பணியாற்றும் லைட்மேன்களுக்கு நிதி திரட்டும் வகையில் இந்த சூஃபி இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் பணியாற்றிய லைட்மேன் குமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உதவிகளை செய்துவிட்ட போதிலும் சினிமாவில் பணியாற்றும் ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் இந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அன்பின் சிறகுகள் என்ற பெயரில் ஞாயிற்றுகிழமை இரவு 7 மணி முதல் 12 மணி வரை நேரு உள்விளையாட்டரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் சூஃபி இசைப்பாடல்களை பாடினார்.
இத்தகைய சூஃபிக்கள் தங்கள் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் வண்ணம் பாடல்களை எழுதினர். அதுவே சூஃபி பாடல்கள்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் சூஃபி இசை நிகழ்ச்சியை ரசிகர்கள் அனைவரும் மகிழும் வகையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -