annaththa 2nd song | சாரல் காற்றே... இளமை ரஜினி.. அழகு நயன்.. வெளியானது அண்ணாத்தே 2வது பாடல்..!

அண்ணாத்தே பாடல்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’படத்தின் 2வது பாடலான சாரக்காற்றே இன்று வெளியாகியது
இப்படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
இசையமைப்பாளர் டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4 ஆம் தேதி படம் வெளியாகிறது.
அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நான்கு நாட்களுக்கு முன்பு வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
சாரல் சாரல் காற்றே பாடலை பாடகர் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர்.
பாடலின் பெரும்பாலான காட்சிகளில் ரஜினிகாந்த் பட்டு வேட்டியிலும், நயன்தாரா சேலையிலும் அசத்துகிறார்கள்