Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Annapoorani Issue : “உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கம் இல்லை..” விஸ்வ இந்து பரிஷத் அமைப்பிடம் மன்னிப்பு கேட்ட ஜீ நிறுவனம்!
நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியான படம் “அன்னபூரணி”. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பையே பெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதன் பின்னர், பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் டிசம்பர் 29 ஆம் தேதி வெளியானது.
இதனை தொடர்ந்து, அன்னபூரணி திரைப்படம் ஆண்டி இந்து திரைப்படம் என்றும் லவ், ஜிஹாத் பிரச்னையை ஊக்குவிக்கிறது என்றும் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜீ ஃபைவ் நிறுவனங்களின் மீதும் மும்பை காவல்துறையிடம் முன்னாள் ஷிவசேனா தலைவர் ரமேஷ் சொலான்கி புகாரளித்திருந்தார்.
இதனால் நெட்ஃப்ளிக்ஸில் இருந்து அன்னபூரணி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குறிப்பிட்ட காட்சிகளை மறு படத்தொகுப்பு செய்ய தாங்கள் இணை தயாரிப்பு நிறுவனமான ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாகவும், அதுவரை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து அன்னபூரணி படத்தினை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜீ நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், இந்து மதத்தினர் மற்றும் பிராமண சமுதாயத்தின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் எந்த நோக்கமும் இல்லை என்றும், அப்படி ஏதேனும் அவர்களது உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -