Agilan : ‘கடல் ராசா நான்..’ துறைமுக வாழ்வை படமாக்கிய அகிலனின் க்ளிம்ப்ஸ் வீடியோ!
பூலோகம் படத்தை இயக்கிய என்.கல்யாண கிருஷ்ணனுடன் இரண்டாவது முறை இணைந்து அகிலன் படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி.
இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். கைதி படம் புகழ் ஹரிஷ் உத்தமன், கருப்பன பட நாயகி தன்யா ரவிச்சந்திரன், மெர்சல் புகழ் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, அகிலன் படத்தின் ட்ரெயலர் மற்றும் இசைவெளியீட்டு விழா நடந்தது. அவ்விழாவில், ஜெயம் ரவியின் இயக்குநர்கள் பலர் கலந்து, மேடையை சிறப்பித்தனர்.
தற்போது, அகிலன் படத்தின் மேங்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. பட ப்ரோமோஷனிற்காக வெளியான இந்த வீடியோவை பார்த்து, பல மக்கள் வாயை பிளந்து வருகின்றனர்.
துறைமுகத்தில் நடக்கும் சட்டவிரோதமான செயல்களுக்கு துணைபுரியும் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியின் இப்படம், மார்ச் 10 ஆம் தேதியான நாளை வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ஜீ 5 நிறுவனம் வாங்கியுள்ளது.இதனையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.