Sara ali khan : அப்போ கேன்ஸ்..இப்போ ராஜஸ்தான்..பிஸியாக வலம் வரும் நடிகை சாரா அலி கான்!
சுபா துரை | 22 May 2023 02:32 PM (IST)
1
பாலிவுட்டில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளுள் ஒருவர் சாரா அலி கான். இவர் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மற்றும் நடிகை அம்ரிதா சிங்கின் மகளும் ஆவார்.
2
பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் நடிகையான இவர் தற்போது நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்.
3
மேலும் இவர் நடிகர் விக்கி கௌஷலுடன் இணைந்து நடித்துள்ள “ஜாரா ஹட்கே ஜாரா பச்கே” பட பிரமோஷனுக்காக இந்தியா திரும்பியுள்ள இவர், ராஜாஸ்தான் மாநிலத்தில் உள்ள வெவ்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார்.
4
ராஜஸ்தானில் உள்ள அஜ்மர் ஷரீப் தர்காவில் சாரா..
5
ராஜஸ்தானில் உள்ள கிராமத்தில் தீவிரமான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் சாரா அலி கான் மற்றும் விக்கி கௌஷல்...
6
“ஜாரா ஹட்கே ஜாரா பச்கே” திரைப்படம் வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.