HBD Priyanka Chopra: ‘அவள் உலக அழகியே..’ நடிகை பிரியங்கா சோப்ராவின் பிறந்தநாள் இன்று!
சுபா துரை | 18 Jul 2023 04:51 PM (IST)
1
சர்வதேச அளவில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய திரைப்பட நடிகை மற்றும் முன்னாள் உலக அழகியும் ஆவார்.
2
மாடலான இவர் 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பின் பிரபலம் ஆனார்.
3
இன்று உலக சினிமாவில் உச்சம் தொட்டுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா 2002 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் தமிழன் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
4
பாலிவுட்டில் பிஸியாக நடித்து வந்த பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் ஆக்டிவாக நடித்து வருகிறார்.
5
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மால்டி மெரி என்ற பெண் குழந்தையும் உள்ளது.
6
இவ்வாறு பல திறமைகளுடன் புகழின் உச்சத்தை தொட்டிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா இன்று தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.