Nazriya nazim : சோஷியல் மீடியாவுக்கு பாய் பாய் சொன்ன நஸ்ரியா..வருத்தத்தில் ரசிகர்கள்!
கேரள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், சிறந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை நஸ்ரியா நஸிம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் 2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் நஸ்ரியா.
பின்னர், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசிலை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆன பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கூட’ திரைப்படத்தின் மூலம் ரீ -என்ட்ரி கொடுத்தார்.
திரைத் துறையிலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா, தற்போது அனைத்து சமூக வலைதள பக்கங்களில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், தான் ரசிகர்களின் அன்பையும் குறுஞ்செய்திகளையும் மிஸ் செய்ய போவதாகவும் விரைவில் திரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நஸ்ரியாவின் இந்த திடீர் முடிவு குறித்து குழம்பி உள்ளனர் ரசிகர்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -