Nazriya Nazim Photos : க்யூட்னெஸிற்கு உருவம் கொடுத்த நடிகை நஸ்ரியாவுக்கு பிறந்தநாள்!
அல்போன்ஸ் புத்திரனின் நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை நஸ்ரியா.
அதன் பிறகு ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ், நய்யாண்டி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் தனது மந்திரப் புன்னகையால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
இவ்வாறு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் திரை உலகில் பிஸியாக வலம் வந்த நஸ்ரியா திடீரென நடிகர் ஃபஹத் ஃபாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
பல ஆண்டுகள் கழித்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார் நஸ்ரியா.
மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தில் நஸ்ரியா நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இன்று தனது 29ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நஸ்ரியாவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.