Mrunal Thakur: ஜொலிக்கும் ப்ளாக் ப்லேஸரில் கலக்கும் சீதா மகாலக்ஷ்மி..வைரலாகும் மிருணாள் தாக்கூரின் நியூ லுக்!
சீதா ராமம் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாக்கூரின் புதிய ப்ளாக் ப்லேஸர் லுக் தற்போது வைரலாகி வருகிறது.
மிருணாள், முதலில் பேடட் டாப் அணிந்து அதன் மேல், கல் பொருத்தப்பட்ட நெட்டட் ஆடை அணிந்து அதன் மேல், ப்ளேக் ப்லேஸரும் அணிந்திருந்தார். இவ்வாறு வித்தியாசமாக ட்ரை செய்து அசத்தியுள்ளார் மிருணாள் தாக்கூர்.
பேண்ட் என்று பார்க்கையில் வைட் லெக் கருப்பு பேண்ட் அணிந்திருந்தார்.மேலும், ம்ருணாள் இந்த லுக்கிற்கு ஏற்றவாறு கருப்பு பாய்ண்டட் ஹில் அணிந்திருந்தார்.
மேக்-அப் என்று பார்க்கையில் நியூடான லிப்ஸ்டிக், லைட் வெயிட்டான மேக் - அப் மற்றும் ஸ்மோக்கி ஐ மேக்-அப்பை தேர்வு செய்திருந்தார் ம்ருணாள். அதிலும் ஜொலிக்கும் கற்களை கண்களில் பயன்படுத்தியிருந்தது கூடுதல் சிறப்பு.
ஆபரணங்கள் என்று பார்க்கையில் காதிற்கு மட்டும் கற்கள் பதித்த கருப்பு வளையத்தை அணிந்திருந்தார் மிருணாள்.
ஹேர் ஸ்டைலிற்கு க்ரீஸியான ஃப்ரீ ஹேர்ஸ்டைலில் அசத்தி இருந்தார் ம்ருனாள். மொத்ததில் இவரது லுக் சூப்பர்..டூப்பர்..!