Actress Meena: நீ வந்தாய் என் வாழ்விலே... நடிகை மீனா திருமணம் ஒரு ரீவைண்ட்!
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை மீனா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடந்த 2009ம் ஆண்டு ஜுலை 12-ம் தேதி நடிகை மீனாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகருக்கும் திருமலை திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வராவின் புனித ஸ்தலத்தில் திருமணம் நடைபெற்றது.
தொடர்ந்து, இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மஹாலில் நடைப்பெற்றது.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ், நடிகர் கமல்ஹாசன், சின்னி ஜெயந்த், நடிகர் முரளி, லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைபிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நல குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக மீனாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -