Kiara advani : கியாரா அத்வானியின் மினி ஸ்கர்ட் 98 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளதா? என்ன சொல்றீங்க?
பாலிவுட் திரைத்துறையில் பிஸியாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து நடித்துள்ள ’சத்யப்ரேம் கி கதா’ திரைப்படம் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கியாரா.
இவ்வாறு ப்ரமோஷனில் கலந்து கொண்ட கியாரா அத்வானியின் மினி ஸ்கர்ட் லுக் தற்போது வைரலாகி வருகிறது.
க்ரீம் நிற ’v’ நெக் பாடி சூட் மற்றும் மினி ஸ்கர்ட்டில் அசத்திய கியாரா, சிம்பிலான மேக்-அப்தான் அணிந்திருந்தார். அதுவே அவருக்கு போதுமானதாகவும் இருந்தது.
அணிகலன்கள் என்று பார்க்கையில் அவரது பாடி சூட் காலருடன் இருப்பதால் கழுத்தில் எதுவும் அணிய வேண்டிய தேவை அவருக்கு இருந்திருக்காது. சில மோதிரங்கள் மற்றும் வேலைப்பாடுகள் நிறைந்த சிறிய வளையம் போன்ற காதணியோடு தனது லுக்கை சிம்பிளாக வைத்து கொண்டார்.
அதோடு பழுப்பு நிற உயரமான ஹீல்ஸ் அனைவரது பார்வையையும் அவரது கால்களின் பக்கம் திருப்பியது. மேலும் கியாரா அணிந்திருந்த இந்த உடை ஜாக்குமஸ் பிராண்ட் என்றும் இந்த உடையின் விலை 98 ஆயிரம் ரூபாய் என்றும் கூறி வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -