HBD Keerthy Suresh: நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் இன்று !
கீர்த்தி சுரேஷ் இந்திய திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர்.
இவர் மலையாள திரையுலகில் 2000 ஆண்டில் பைலட்ஸ், 2001-ல் அச்சனே எனக்கு இஷ்டம், 2002-ல் குபேரன் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்
2013-ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் நடிகையாக மீண்டும் நடிக்க தொடங்கினார்
2015-ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கினார்
தொடரி, ரெமோ, பைரவா ஆகிய திரைப்படங்களில் தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்து இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கினார்
2019-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த மகாநதி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்
இன்று பிறந்தநாள் காணும் கீர்த்தி சுரேஷிற்கு வாழ்த்துக்கள்