Thalapathy 68 Update : இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் தளபதி 68 படப்பிடிப்பு!
நடிகர் விஜய் தற்போது தன் 67ஆவது படமான லியோ படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appலோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வரும் நிலையில், வரும் அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் கடந்த மே 21ஆம் தேதி விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் நிலையில், வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் பெயர் சி.எஸ்.கே வாக இருக்கலாம் என்றும் 2024 ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகும் என்று நெருங்கிய திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -