Sivakarthikeyan Line Up : கை நிறைய படங்களோடு தமிழ் சினிமாவை கலக்க காத்திருக்கும் சிவகார்த்திகேயன்!
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனது நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார். இதன் மூலம் சிவகார்த்திகேயன் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். அவரது திரைப்பட லைன் - அப்பை இங்கே பார்க்கலாம்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்தியேன். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் SK22 திரைப்படம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியிடப்படாமல் இருக்கிறது. மேலும் இவருக்கும் ஜோடியாக இந்த திரைப்படத்தில் மிருனாள் தாக்கூர் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் SK23 திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இவருக்கும் ஜோடியாக நடிகை ருக்மினி வசந்த் நடிக்கிறார்.
பின்னர் டான் இயக்குநர் சிபி சக்ரவர்த்தியுடன் மீண்டும் ஒரு முறை இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் கோட் திரைப்படத்தை பிஸியாக இயக்கி வரும் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.