Santhosh Prathap | இவர் பாக்சர் ராமன்..! நடிகர் சந்தோஷ் பிரதாப்பின் மாஸ் கிளிக்ஸ்!
2014-ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் மூலம் அறிமுகமானார் சந்தோஷ் பிரதாப்.
தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றார் சந்தோஷ்.
கண்ணன் இயக்கத்தில் வெளியான தாயம் படத்தில் அஸ்வின் என்ற கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருந்தார்.
தாயம் திரைப்படம் முழுவதுமே ஒரே அறையில் நடைபெறும் கதைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு தயாரிப்பில் வெளியான மிஸ்டர் சந்திரமௌலி திரைப்படத்தில் சந்தோஷ் நடித்த வில்லன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
'பொதுநலன் கருதி' என்ற படத்தில் நெப்போலியன் என்ற கதாபாத்திரத்தில் முன்னணி நடிகராக நடித்தார் சந்தோஷம்.
இறுதியாக ஸ்ரீதர் வெங்கடேசன் என்பவர் இயக்கத்தில் என் பெயர் ஆனந்தன் என்ற திரைப்படத்தில் நடித்தார் சந்தோஷ்.
தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் பாக்சர் ராமனாக களமிறங்கியுள்ளார் சந்தோஷ்