Paruthiveeran Row : ஞானவேல் ராஜாவைக் கண்டித்து காட்டமாக அறிக்கை வெளியிட்ட சமுத்திரகனி!

சமுத்திரக்கனியின் புதிய அறிக்கை
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இயக்குநர் அமீருக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் இயக்குநர் அமீருக்கு, திரையுலக பிரபலங்கள் தங்களுடைய ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா யூடியூப் சேனல் ஒன்றில் நேர்காணல் அளித்திருந்தார். அந்த நேர்காணலில் இயக்குநர் அமீரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
காணொளி வைரலாக பரவிய நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக இயக்குநர் சசிகுமார் ,இயக்குநர் பாரதிராஜா,நடிகர் சமுத்திரக்கனி, இயக்குநர் கரு பழனியப்பன் உள்ளிட்டோர் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
திரை பிரபலங்களின் எதிர்ப்புகள் அதிகமானதால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “நேர்காணலில் நான் பேசியது ஏதாவது இயக்குநர் அமீரை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகர் சமுத்திரகனி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் பருத்திவீரன் படத்திற்கு நீங்கள் கொடுக்க வேண்டிய ஒட்டுமொத்த தொகையையும் தரவேண்டும்” எனவும் சமுத்திரகனி தெரிவித்துள்ளார்