Jailer Second Single : ரஜினியின் ஆக்ஷன் காட்சிகளை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டதாக ஹுக்கும் பாடல் ? இன்று மாலை வெளியாகும் ஹூக்கும் பாடல் !
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'.
இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில், வசந்த் ரவி, விநாயகன் என மிக பெரிய திரை பட்டாளமே நடித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் சிங்கிளான ’காவாலா’ என்ற பாடல் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ’ஹூக்கும்’ என்ற பாடலை படக்குழூ இன்று மாலை வெளியிடவுள்ளது.
இப்பாடல் முழுக்க முழுக்க ரஜினியை மைய்யப்படுத்தியும், சண்டைக்காட்சிகளுக்காக உருவாக்கப்பட்ட பாடல் எனவும் கூறப்படுகிறது.
அதைதொடர்ந்து, விரைவில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.